(UTV|COLOMBO) – ஐனாதிபதி தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றமை, மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுகின்றமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அதிகாரிகள் விசாரணைகைள முன்னெடுப்பதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,835 முறைபாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கபெற்றுள்ளதுடன், அதில் 1,738 முறைபாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை குறித்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.