Trending News

சரும வறட்சியை போக்கும் நெய்

(UTV|COLOMBO) – சரும வறட்சியை தடுக்க நெய் பெரிதும் உதவுகின்றது. நெய்யை எந்த முறையில் பயன்படுத்தினால் சரும அழகை பாதுகாக்க முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

நெய் ஆரோக்கியமான மற்றும் எடை அதிகரிப்பதற்கும், மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற நெய் பயன்படுத்தப்படுகிறது.

* நெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. சிறிதளவு நெய்யை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து எதிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்

* நெய் எண்ணெய் குளியலுக்கு ஏற்ற பயனுள்ள பொருள். 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.

* உங்கள் கண்கள் சோர்வடைவதால் களைப்படைவதால் பாதிக்கப்படுகின்றவரா நீங்கள் சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.

* உலர்ந்த உதடுகளை தடுத்து பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கின்றது. அதற்கு தினமும் படுக்க போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

Related posts

Toxic gas leak gives guests breathing problems at Sydney hotel

Mohamed Dilsad

Five including woman arrested over drug racket

Mohamed Dilsad

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும்

Mohamed Dilsad

Leave a Comment