Trending News

தாராபுரம் ஹாஜா அலாவுதீன் இரு நூல்கள் வெளியீடு

(UTV|COLOMBO) – தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் அவரது 40 வருட கலை வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (27) தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

கலாநிதி யூசுப் கே மரைக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அறிமுகவுரையை கலைவாதி கலீலும் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபாவும் நிகழ்த்தினர்.

ஹாஜாவின் வானொலி நாடகங்களை கலாநிதி ரவுப் ஸெய்னும் எங்கஊரு பாட்டை அஸ்ரப் சிஹாப்தீனும் ஆய்வு செய்தனர். கவிநேசன் நவாஸ் வாழ்த்து கவி பாடினார்.

இந்த நிகழ்வில் வானொலி நாடக கலைஞர்களான ஞே. ரஹீம் சஹீட் மற்றும் மஹ்தி ஹசன் இப்றாஹீம் ஆகியோ ஹாஜாவின் வாழ்கைப் பட்ட வலிகள் என்ற நாடகத்தை மேடையில் நடித்துக்காட்டி சபையை மெருகூட்டினர். இந்த நிகழ்வில் , ஹாஜாவின் எழுத்துப் பணிக்கு உத்வேகம் அளித்த வானொலி, தொலைக்காட்சி நாடக கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டது.

Related posts

Winds and rains to lash Sri Lanka

Mohamed Dilsad

ඩොනල්ඩ් ට්‍රම්ප්ගේ ජනාධිපතිවරණ ජයග්‍රහණයෙන්, ඇමරිකන් ඩොලරයට හොඳ කලක්

Editor O

சஜின் வாஸுக்கு பிணை

Mohamed Dilsad

Leave a Comment