(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 8257 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
371 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 11 தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பி.ஏ.ஜே ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 150 முதல் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.