(UTV|COLOMBO) – மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹவெல சந்தியில் இன்று(28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஜீப் ஒன்றும் எதிர் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காயமடைந்த நபர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.