(UTVNEWS | COLOMBO) – கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் உயிரிழந்தார்.
சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சுஜித்தை உயிருடன் மீட்க 82 மணிநேரமாக நடந்த மீட்பு பணி தோல்வியில் முடிந்துள்ளது,
இன்று அதிகாலை 4.30 மணியளவில் சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
பின்னர் மணப்பாறை அரச வைத்தியசாலைக்கு குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அப்போது தெரிவித்தார்.