(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வாக்குப்பதிவு இடம்பெறும் மத்திய நிலையத்தின் பணிகளை கண்காணிக்கவும் மற்றும் நடமாடும் சேவையின் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், மாவட்ட செயலகம், தேர்தல்கள் செயலகம் மற்றும் குறிப்பிட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தபால்மூலம் வாக்களிப்பதற்க நவம்பர் மாதம் 4 ஆம் திகதி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.