Trending News

ஸ்ரீ.பொ.மு. ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்கள் இடையிலான சந்திப்பு இன்று

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(29) இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 07 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பதவி நிலைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, கொம்மியூனிஸ்ட் கட்சி, சம சமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன.

Related posts

පොදු රාජ්‍ය මණ්ඩලීය 25 වන රාජ්‍ය නායක සමුළුවේ සමාරම්භක අවස්ථාව

Mohamed Dilsad

Brazil wildfires: Blaze advances across Pantanal wetlands – [IMAGES]

Mohamed Dilsad

“Government will increase research funds in the future” – President

Mohamed Dilsad

Leave a Comment