Trending News

மரண தண்டனைக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு டிசம்பர் வரை நீடிப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று(29) உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Rail commuters stranded due to train strike

Mohamed Dilsad

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

Mohamed Dilsad

JVP decides to contest under new symbol

Mohamed Dilsad

Leave a Comment