(UTV|COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியராக கடமையில் இருக்கும் போது அரச கட்சி ஒன்றுக்கு ஆதரவு வழங்கி வேலைத்திட்டங்களில் பங்கேற்பது தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின் போது வைத்தியர் அனுருத்த பங்கேற்றிருந்தமை தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.