(UTV|COLOMBO) – லெபனான் பிரதமர் ஸாத் அல் ஹரிரி அவரது இராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளார்.
கடந்த 17ம் திகதி முதல் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் பிரதமர் இவ்வாறு பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தவிர்க்கவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மிஷேல் ஆவுனுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வட்ஸ்அப் அழைப்புகளுக்கு வரிவிதிக்கும் திட்டங்களுக்கு எதிராகத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் பின்னர் அரசியல், ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.