(UTV|COLOMBO) – மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் அபேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(29) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்திருந்தார்.
கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய புனித தலமாக விளங்கும் மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து பக்தர்களினதும் வழிபாட்டிற்குரிய தலமாக விளங்குதல் விசேட அம்சமாகும். மடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது மாத்திரமன்றி, வருடம் பூராகவும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலட்சக்கணக்கில் அங்கு வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.