(UTV|COLOMBO) – உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று(30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அலிகொட்டஆற, டயரபா,புஹுல்பொல மற்றும் ஹந்தபானாகல ஆகிய நீர்த் தேக்கங்கள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட உள்ளன.
அலிகொடஆர நீர்த்தேக்கம் 5200 அடி நீர் கொள்ளவைக் கொண்டமைந்துள்ளது.
இதேவேளை, கரந்தகொல்ல நீர்மின் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பரிசீலனை செய்வார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வௌியிட்டுள்ளது.
120 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய கரந்தகொல்ல மின் உற்பத்தி நிலையம் அடுத்த வருடம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.