Trending News

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம் [VIDEO]

(UTV|COLOMBO) – 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை(31) ஆரம்பமாகிறது.

இந்தத் தேர்தலில் 6 39 515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் நாளை(31) மற்றும் நாளை மறுதினம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி தாம் சேவையாற்றும் பிரதேசங்களிலுள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் தமது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

අනුර, රනිල්ට සහය දීමට තීරණය කරයි

Editor O

Fuel price revision on Friday

Mohamed Dilsad

George Bush Senior dies at the age of 94

Mohamed Dilsad

Leave a Comment