(UTV|COLOMBO) – பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் 64வது படத்தில் பிரபல நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாகவும், டெல்லியில் நடைபெறும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.