Trending News

பற்களின் மஞ்சள் கறையை போக்க என்ன செய்யலாம்?

(UTV|COLOMBO) – இன்று பலர் தங்களது வாயில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதில் சொத்தைப் பற்கள், வாய் துர்நாற்றம், மஞ்சள் கறையுடனான பற்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் பற்களைத் துலக்க வேண்டும். இருப்பினும் பற்களைத் துலக்குவதால் மட்டும், பற்களில் படிந்துள்ள மஞ்சள் களைகளைப் போக்க முடியாது.

எனவே பலர் தங்களது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க வீட்டிலேயே ஓர் எளிய வழியின் மூலம் பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க முடியும்.

தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
டூத் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
அலுமினியத்தாள்

செய்முறை:
ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அந்த கலவையை இரண்டு துண்டு அலுமினியத் தாளின் மீது தடவ வேண்டும். பின் ஒரு துண்டை மேல் பற்களின் மீதும், மற்றொன்றை கீழ் பற்களின் மீதும் வைக்க வேண்டும். 2 நிமிடம் கழித்து, அலுமினியத்தாளை நீக்கி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். எஞ்சிய கலவையைக் கொண்டு, மீண்டும் பற்களை கை விரலால் துலக்கி, நீரால் வாயை கொப்பளியுங்கள். முக்கியமாக ஒருமுறை இந்த கலவையைத் தயாரித்தால், அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். மறுநாளைக்கு வைத்து பயன்படுத்தக்கூடாது.

குறிப்பு- பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க உதவும் இந்த வழியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால், பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள் கறைகள் காணாமல் போவதோடு, பற்கள் வெள்ளையாகவும், வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும். மேலும் இது இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.

பற்களின் மஞ்சள் கறையை போக்கும் டிப்ஸ்கள்
* பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும்.

*எலுமிச்சை பழத்தை கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகளை எளிதில் நீக்கலாம்.

*தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்கும்.

* சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும்.

* இரவு உறங்கும் முன், ஆரஞ்சு பழ தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொண்டு காலையில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

Related posts

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

Mohamed Dilsad

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Ferrari appeal against Vettel penalty

Mohamed Dilsad

Leave a Comment