(UTV|COLOMBO) – பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது
பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவுக்கு ஆதரவாக 438 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தச் சட்டமூலத்திற்கு பிரித்தானிய பிரபுக்கள் சபை அனுமதியளிக்க வேண்டியுள்ளதுடன், இவ்வார இறுதியில் அது சட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டினதும் பிரெக்ஸிட்டினதும் எதிர்காலம் கருதி, பொதுமக்கள் தமக்கான ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1923-ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டுதான் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது என்ற நிலையில் பாராளுமன்ற பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பிரபுக்கள் சபையும் ஒப்புதல் அளித்தால் திட்டமிட்டபடி டிசம்பர் 12 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.