(UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக முடியாது என்றும், முடியுமெனில் தன்னை விலக்கி காட்டுமாறும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.