(UTV|COLOMBO)- 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று(31) ஆரம்பமாகிறது.
தபால்மூல வாக்கெடுப்பு இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளதுடன், காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இந்தத் தேர்தலில் 6 39 515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தபால்மூல வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்காக சுமார் ஆயிரம் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.