(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள விசேட பாதுகாப்புடன் கூடிய காகித அட்டைகளினால் ஆன வாக்குப்பெட்டிகளை கையாளும் முறை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் எவ்வாறு குறித்த பெட்டிகளை கையாளுவது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த தேர்தலுக்காக 12 ஆயிரத்திற்கும் அதிகமான காகித அட்டை வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.