Trending News

ஹேமசிறி – பூஜித் பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரினால் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமக்கு பிணை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்மை பிணையில் விடுவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் திருத்தப்பட்ட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி தம்மை இரகசிய பொலிஸார் மூலம் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் தெரிவித்தனர்.

எனினும், தமக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டினை சுமத்த போதுமானளவான சாட்சியங்கள் இல்லை என குறிப்பிட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் தாம் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், அதனை தொடர்ந்து சட்டமா அதிபர் அதற்கு எதிராக மேல் நீதிமன்றில் திருத்தப்பட்ட மனுவொன்று தாக்கல் செய்ததாக குறிப்பிட்டனர்.

சட்ட மா அதிபரின் திருத்தப்பட்ட மனுவினை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமது பிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டதாகவும், குறித்த உத்தரவு பிழையானது என பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன்

Mohamed Dilsad

Is Gigi Hadid rekindling romance with former boyfriend Zayn Malik?

Mohamed Dilsad

Three dead and 3 injured in accident

Mohamed Dilsad

Leave a Comment