(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான நேற்று(31) நடைபெற்ற முதலாவது தபால்மூல வாக்களிப்பின் போது, ஒரு வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் குறித்த முறைகேட்டுக்கு அதிகாரி ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக அறிய வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
விசாரணையின் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலை ஏற்படுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நேற்று தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமான சில மணி நேரத்துக்கிடையில் அரச ஊழியர் ஒருவர், தான் வாக்களிப்பதை தொலைபேசி மூலம் படமெடுத்து பகிரங்கப்படுத்தியுள்ளதாக அறிந்தேன். உடனடியாக அந்த ஊழியரின் செயற்பாடு தொடர்பில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அதே சமயம் குறித்த அந்த ஊழியர் அவ்வாறு நடப்பதற்கு வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரித்தறியுமாறு பணித்துள்ளேன் என குறிப்பிட்டுளார்.