(UTV|COLOMBO) -சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவித்தலின் பேரிலேயே இலங்கையுடன் அமெரிக்கா மிலேனியம் சவால் வேலைத்திட்ட உடன்படிக்கை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிலிருந்து எந்தவித விலகலும் இல்லை என்றும், சட்டமா அதிபரும் அதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் குறித்த அமைச்சு ஊடக அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.