(UTVNEWS | COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு என கிளிநொச்சி அரசாங்க அதிபரும் தேர்வத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தபால்மூல வாக்கெடுப்பிற்காக 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், அதற்காக 200க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.