(UTV|COLOMBO) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான நாளாந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் வர்த்தக போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஒருவழி விமான கட்டணம் 7,900 ரூபா (இந்திய நாணயத்தில் 3,090) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையில் திங்கள், புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.