(UTV|COLOMBO) – கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு பாணியில் தவறு ஏதும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 9 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.
கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு பாணி குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்தது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.