(UTV|COLOMBO) – மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலி நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள மெனாகா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.