(UTV|COLOMBO) – இன வாதம் மத வாதம் தீவிர வாதம் என்பவற்றை வைத்தே மஹிந்த ராஜபக்ச காலத்தில் தாங்கள் அரசியல் செய்ததாக அப்போதைய அமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதன் விளைவுகளை தாம் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் கண்டுகொண்டதாகவும், தற்போதும் கூட பொதுஜன பெரமுன கட்சி இன வாதம் மத வாதம் தீவிர வாதம் என்பவற்றை வைத்தே அரசியல் செய்வதாகவும் சஜின் வாஸ் குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.