Trending News

யாழில். பல தரப்பினர்களுடன் பிரதமர் இன்று பேச்சுவார்த்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ். நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். 

 

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக வடக்கிற்கு விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் போது நாகவிகாரையின் விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த வழிபாட்டில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனரத்தின உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  பல தரப்புனர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களையும் பிரதமர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Meghan King Edmonds celebrates Halloween amid split with husband Jim

Mohamed Dilsad

ஒரு நிமிடத்திற்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம்-மெஸ்சி

Mohamed Dilsad

‘UNP Restructuring Report’ to be submitted today

Mohamed Dilsad

Leave a Comment