Trending News

நாட்டில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவோம் – கோட்டாபய

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் தனது நிர்வாகத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

வத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச புலனாய்வுப் பிரிவினர், இலங்கையில் இந்த தினத்தில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசாங்கம் அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதனால்தான் இந்த இழப்பை நாம் எதிர்க்கொண்டுள்ளோம். நாம் அன்று முன்னெடுத்திருந்த பாதுகாப்புக் கட்டமைப்புக்களை அப்படியே கொண்டுசெல்லாதமைத்தான் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது.

இதற்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிச்சயமாக பதில் கூறியே ஆகவேண்டும். நாம் வெற்றிப் பெற்றவுடன், நாட்டில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவோம்.

எமது ஆட்சியில் எந்தவொரு தீவிரவாதிக்கும் அடிப்படைவாதிக்கும் அனுமதி கிடையாது என்பதை இவ்வேளையில் நான் மக்களிடம் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

Related posts

Neymar named in Brazil’s 23-man squad

Mohamed Dilsad

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

Mohamed Dilsad

මැදින් පුර පසළොස්වක පොහොය අදයි

Editor O

Leave a Comment