(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் இன்றும்(04) நாளையும்(05) தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தபால் மூலம் வாக்களிப்பு இன்றும் நாளையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த 31 ஆம் திகதி மற்றும் முதலாம் திகதிகளில் அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும், இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கும் தபால் மூல வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
எனினும் குறித்த தினத்தில் வாக்களிக்க தவறியவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி சந்தர்ப்பம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.