(UTV|COLOMBO) – இந்த நாட்டில் மனிதன்மைக்கு முதலிடம் கொடுத்து நாட்டில் எந்த ஒரு சக இன சமூகத்தையும் அவர்கள் சிறுபான்மை என ஒதுக்காத ஒரு ஆட்சியை உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் முல்லைத்தீவில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களும் இங்கு கருத்து தெரிவித்தனர்.