(UTV|COLOMBO) – இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு உலர் உணவுப் பொதியை தம் ஆட்சியில் தாம் வழங்கவுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் தமது அரசியல் விஞ்ஞாபனத்தில் இல்லை என்றாலும் அது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களுத்துறை புலத்சின்ஹல பகுதியில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே மஹிந்த ராஜபக்ச இந்த கருத்தை முன்வைத்தார்.
இந்த அரசியல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் தம் கருத்துக்களை முன்வைத்தனர்.