(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(05) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமயகத்தில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் பதில் தவிசாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையில் கூடவுள்ள குறித்த கூட்டத்தில், ஒழுக்க விதிகளை மீறியவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கொள்கை ரீதியாக இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவுள்ளது.
மேலும், தற்போதைய அரசியல் நிலவரம், கட்சியின் மீளமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.