Trending News

போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

(UTV|COLOMBO) – பொரலஸ்கமுவ பகுதியில் ஒரு தொகை போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 3 பண தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நாணயத்தாளை அச்சிடும் பகுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 7 நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாணயத்தாளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கணனி மற்றும் ஸ்கேனர் இயந்திரமொன்றும் ​பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

Sri Lanka, Pakistan to sign MoU on bilateral cooperation in foreign affairs during President’s visit

Mohamed Dilsad

கொழும்பில் சர்வதேச உலக சுகாதார தின வைபவம்

Mohamed Dilsad

சாரதிகளுக்கான விடுமுறை இரத்து

Mohamed Dilsad

Leave a Comment