Trending News

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் சமோசா

(UTV|COLOMBO) – குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – 1/2 கப்
உருளைக் கிழங்கு – 250 கிராம்
சீஸ் – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
கோதுமை மா – 2 கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :
உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை துருவிக்கொள்ளவும்.

உருளைக் கிழங்கு ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

மா பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

இப்படி ஒவ்வொரு மாவாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசா அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

சுவையான உருளைக்கிழங்கு சீஸ் சமோசா தயார்.

Related posts

ஏற்பட்ட உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை

Mohamed Dilsad

போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Mohamed Dilsad

Special sitting of Parliament today

Mohamed Dilsad

Leave a Comment