Trending News

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளி

(UTV|COLOMBO) – வடக்கு அந்தமான் கடற்பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் வடமேல் திசையை நோக்கி செல்லக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இதன் காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

Avengers 4: Will Tony Stark and Steve Rogers reunite in flashback?

Mohamed Dilsad

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

Mohamed Dilsad

Leave a Comment