(UTV|COLOMBO) – மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புபட்ட ஒருவரான மாலைதீவு பிரஜை ஒருவரை கைது செய்ய உதவுமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அவரது மாதிரிப் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ள பொலிஸ், அவர் தொடர்பான தகவல்களை 011 2326936 எனும் தொலைபேசி ஊடாக அறிவிக்குமாறும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.