(UTV|COLOMBO) – இந்தியாவின் புது டெல்லியில் வளி மாசு நிலவுவதால் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு மேலும் அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வளியின் தர குறிகாட்டி 40-க்கும் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபடுதலின் காரணமாக மேற்படி நிலைமை கொழும்பில் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதனால் சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி அறிவுறுத்தியுள்ளார்.