Trending News

எஸ்.பி.திஸாநாயக்கவின் வாகனத்தை மறித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

(UTVNEWS | COLOMBO) – சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கினிகத்தேன பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தை மறித்ததாக கூறப்படும் சம்பவத்தில் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

Mohamed Dilsad

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு

Mohamed Dilsad

One killed in Wellawaya accident

Mohamed Dilsad

Leave a Comment