(UTV|COLOMBO) – ராஜபக்ச தரப்பினரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை எரித்து அவர்களின் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாக கூறி வருபவர்கள் அதற்காக எவ்வாறான திட்டத்தை வைத்துள்ளார்கள என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
UTVக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.