Trending News

தபால்மூல வாக்களிப்பு – இன்று இறுதி சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூல வாக்களிபில் வாக்கை பதிவு செய்ய தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று(07) வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தபால் மூலம் வாக்களிக்க தவறிய அரச ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31 திகதி, நவம்பர் 1 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றன.

தபால்மூலம் வாக்களிக்க இம்முறை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 317 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் பலர் பலி…

Mohamed Dilsad

இரத்மலானை விமான நிலையம் – நீண்டகால அபிவிருத்தி திட்டம்

Mohamed Dilsad

“Hall of Fame” விருதைப் பெற்றார் முரளிதரன்!!

Mohamed Dilsad

Leave a Comment