Trending News

அதிவேக வீதியின் மேலும் சில பகுதிகள் திறப்பு

(UTV|COLOMBO) – தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதிகள் இன்று(07) திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மாத்தறை முதல் மத்தள வரையான பகுதியும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான சுமார் 40 கிலோ மீற்றர் கொண்ட பகுதியும் இன்று திறக்கப்படவுள்ளது.

கடவத்தையில் இருந்து கெரவலபிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிச்சுற்று வீதி திறக்கப்பட்டதன் பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக மாத்தறை வரை செல்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

මේ වසරේ, ගතවූ කාලය තුළ දියේ ගිලීමෙන් 257 මිය ගිහින්

Editor O

US fires next shot in China trade war

Mohamed Dilsad

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

Mohamed Dilsad

Leave a Comment