(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க முடியுமா என அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு, கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என அவர் நேற்று(06) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
மிலேனியம் சவால் வேலைத்திட்ட உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த சவாலை விடுத்தார்.
இந்த உடன்படிக்கையின் கீழ் ஒரு அங்குலமேனும் அமெரிக்காவுக்கு வழங்கப்படப்போகிறது என யாராவது நிரூபித்தால் தாம் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாகவும் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.