(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாத உடல் பலவீனமானவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கால எல்லை எதிர்வரும் சனிக்கிழமையுடன் (09) நிறைவு பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை மருத்துவ சான்றிதழுடன், தமது கிராம உத்தியோகத்தரிடம் அல்லது தெரிவத்தாட்சி உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.