Trending News

பேரூந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – 13 பேர் பலி

(UTV|COLOMBO) – பாகிஸ்தானில் பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும்நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள மத்தியாரி மாவட்ட நெடுஞ்சாலையில் சென்ற ஒரு பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கரவண்டி மீது வேகமாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு சிந்து மாகாண மந்திரி உத்தரவிட்டார்.

பேருந்தும் ரிக்சாவும் மோதிய விபத்தில் 13 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

Mohamed Dilsad

Former Kosovo Premier arrested in France

Mohamed Dilsad

17 இந்திய மீனவர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment