(UTV|COLOMBO) – நிலையியல் கட்டளை 16இன் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை(11) காலை 11.30 மணிக்கு பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டள்ளது.
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று(07) இடம்பெற்ற நிறைவேற்று குழுக்கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அன்றையதினம் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட தவறுகளை தவிர்க்கும் நகல் சட்டமூலம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தவிர புத்தாக்க முகவர் நிலையத்தை அமைப்பது தொடர்பான நகல் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.