Trending News

ஆஸியில் இலங்கை பிரஜையின் விளக்கமறியல் காலம் குறைப்பு

(UTV|COLOMBO) – விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான மனோத் மார்க்ஸ் இனது விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் அவருக்கு 12 வருடம் விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் பாரதூரமான மனநல பாதிப்புக்கு உள்ளானவர் என்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பிணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியிற்கு இன்னாள் ஜனாதிபதி அஞ்சலி

Mohamed Dilsad

Museum and movies planned for Thai cave

Mohamed Dilsad

Woman arrested with heroin

Mohamed Dilsad

Leave a Comment