(UTV|COLOMBO) – கினிகத்தேனை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்பி திசாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் எமது செய்தித் தளத்தின் நியூஸ் ஹவர் (NewsHour) நிகழ்ச்சி எஸ்பி திசாநாயக்க அவர்களை தொடர்பு கொண்டு வினவியிருந்தது.
அது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. கினிகத்தேன லக்ஷபான கிராமத்தினூடாக கூட்டமொன்றுக்கு சென்று திரும்புகையில் அந்த வீதி மிகவும் குண்டும் குழியுமான ஒரு வீதி.. எமது வாகனங்கள் முன்னோக்கிச் சென்றது.
அப்போது எமது மெய்ப்பாதுகாப்பாளர்கள் பயணித்த வாகனம் உடைந்தது. அவர்கள் வேன் ஒன்றினூடாக வந்தனர்… அவ்வழியே திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று குடிபோதையில் இருந்த குழுவினர் எமது மெய்ப்பாதுகாவலர்கள் சென்ற வாகனத்தினை முந்திச் சென்றுள்ளது. அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது..
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, எமது பொலிஸ் அதிகாரிகள் இருந்த வாகனத்தினை தாக்கி அவர்களிடம் இருந்து துப்பாக்கியினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அதிகாரிகள் நிலத்தினை நோக்கி இரண்டு சூடுகளை நடத்தியுள்ளனர். அவர்கள் நினைத்திருக்கவில்லை குண்டு நழுவி காலில் காயம் ஏற்படும் என… ஆனால் அவ்வாறு நடந்துள்ளது. இது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும். இந்த சம்பவத்திற்கு காரணம் வீதியின் குண்டும் குழியுமே என்றும் இன்னும் அவர்கள் குடிபோதையில் இருந்ததுமே எனவும் அந்த இளைஞர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்கள் மீது காயப்பட்டதை தொடர்ந்தும் எமது அதிகாரிகள் பொலிசில் சரணடைந்தனர். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தது போல் நானும் விரும்புவது பக்கசார்பற்ற ஒரு விசாரணையே ஆகும்.
இப்போது குடிபோதையில் வந்த குழுவினரது வாகனம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் இருந்த அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். அது தொடர்பில் பொலிசார் விசாரிக்கின்றனர். எனினும் அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பக்கசார்பற்ற விசாரணை ஒன்றினை பொலிசார் முன்னெடுப்பார்கள் என நாம் நம்புகிறோம்.
குறித்த சம்பவத்தின் போது தான் வாகனத்தில் இருக்கவும் இல்லை.. எமது வாகனம் முன்னே சென்று விட்டது. அவர்கள் வந்த வாகனம் பாதுகாப்பு வாகனம் அவர்களது வாகனத்திற்கு வருவதில் வீதியில் சிக்கல் நிலை இருந்தது. பாதை மோசமாக இருந்ததால்…
எனினும், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களது தற்காப்பிற்காகவே நிலத்தில் சுட்டதாக தெரிவித்திருந்தார்கள்…” எனத் தெரிவித்திருந்தனர்.