Trending News

கடும் மழை காரணமாக 25 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – சோமாலியா நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்தனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சோமாலியாவில் கடும் மழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 2,70,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
5,47,000-க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிர்ஷாபெல்லே, ஜுபாலாந்து மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள ஜூபா மற்றும் ஷாபெல் நதிகளின் அருகில் உள்ள பெரும்பாலான கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, என மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சோமாலியா நீர் மற்றும் நில தகவல் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Wimal appointed Housing, Social Welfare Minister

Mohamed Dilsad

அரசாங்கத்திற்கான ஆதரவு – த.தே.கூ அதிர்ப்தி

Mohamed Dilsad

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…

Mohamed Dilsad

Leave a Comment